பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த சிபிசிஐடி..!
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 4 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை கையிலெடுத்த சிபிசிஐடி போலீசார் நேற்று எட்டு பேரின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். வீடுகளில் இருந்த பெண் டிரைவ், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்களிடம் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இன்று மீண்டும் விசாரணை நடத்திய அதிகாரிகள் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.






