சூறாவளிக் காற்றில் சிக்கி சுழன்றடித்து விழுந்த கார்..!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணங்களில் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான மரங்கள் விழுந்து குடியிருப்பு பகுதி சேதமடைந்தது. மேலும் வீடுகள் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்து நகரமே அலங்கோலமாய் காட்சியளிக்கிறது.
45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவித்து வரும் நிலையில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதனிடையே டெக்ஸாஸில் சூறாவளி காற்றில் கார் ஒன்று சிக்கி சுழன்று அடித்துவிடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





