சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை என தெரிவித்த ஓபிஎஸ்..!
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் எதையும் தீட்டவில்லை என்று ஓபிஎஸ் இன்று வாக்கு மூலம் அளித்தார். சொத்துக்குவிப்பு வழக்கின் போது அழுது கொண்டிருந்த ஓபிஎஸ்சிடம் அழாதே பன்னீர் என்று ஜெயலலிதா ஆறுதல் கூறியதாகவும் ஓபிஎஸ் சுருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக வாக்குமூலம் அளித்த பன்னீர்செல்வம் பொதுமக்களின் சந்தேகம் வலுபட்டால்தான் ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டது என்று கூறினார். 2011, 2012 ஆம் ஆண்டிலும் அதற்கு பின்னரும் சசிகலா அவரது குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு எதிராக எந்தவிதமான சதி திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.
ஐஏஎஸ். ஐபிஎஸ் அதிகாரிகள் அளித்த வாக்குமூலங்கள் உண்மைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் போது துயரம் தாங்காமல் தான் அழுத பொழுது அழாதே பன்னீர் தைரியமாக இருங்கள் என ஜெயலலிதா ஆறுதல் கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.





