ஃபேஸ்புக் நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது ரஷ்யா..!
மெட்டா நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அந்த நிறுவனம் நடத்திவரும் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெட்டா மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களிலும் தீவிரவாத செயல்களை செய்வதாக ரஷ்ய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்ற பேஸ்புக் இணைய தளங்களுக்கு தடை விதிப்பதாக மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது.
அந்த நிறுவனம் நடத்தி வரும் வாட்ஸ்ஆப் செயலியை தடை விதிக்கப்படும் எனவும் ரஷ்யா – உக்ரைன் போரின்போது நிறுவனம் ரஷ்யா எதிர்ப்பை நோக்கி செயல்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.





