தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை..!
குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை தங்குதடையின்றி வாங்குவதற்கு வசதியாக மாதம்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக முதல் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டது.
அதன் காரணமாக அந்த மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தாமதமாக தொடங்கியது. ஜனவரி மாதத்திற்கான பொருட்களை அந்த மாதம் முழுவதும் வழங்கி முடிக்க வேண்டும் என்பதால் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 30 ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு வர வேண்டியதாக உள்ளது.
வார விடுமுறை நாளான ஜனவரி 30-ஆம் தேதி பணிபுரிந்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது அவர்களுக்கு மாற்று விடுப்பை கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
இதன்படி ஜனவரி 30ஆம் தேதிக்கு மாற்றாக மார்ச் 19 நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





