--- --:--:-- --

பச்சிளம் குழந்தையை சாக்கடை கால்வாயில் வீசிய பெண்..!

4

தஞ்சாவூர் அருகே பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் சாக்கடை கால்வாயில் வீசிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள சாக்கடை கால்வாயை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

அப்பொழுது கால்வாயில் குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிறந்த குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 

பெண் ஒருவர் குழந்தையை கொண்டுவந்து கால்வாயில் வீசி விட்டு மரக்கட்டையால் அழுத்துவது பதிவாகியிருந்தது, இதையடுத்து அந்த காட்சிகளின் அடிப்படையில் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon