ரஷ்யா ஏவுகணையால் நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் மரணம்..!
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் வெளிநாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் உயிரிழந்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே மூன்று வாரத்திற்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ஐநா மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது ஏவுகணை ஒன்று நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டின் நடிகை உயிரிழந்துள்ளார். இதனை ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகை உறுதி செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





