--- --:--:-- --

முன்னாள் மனைவியை தோழி எனக்கூறிய தனுஷ் ட்வீட்..!

3

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆல்பம் சாங்கிற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்தது டிவிட்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்ததாக அறிவித்தனர்.

 

அதன்பின் இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள ஆல்பம் வெளியாகி உள்ளது. அதனை அவரது தந்தை ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். இந்த பாடலை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள தனுஷ் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா என குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon