ஆரம்ப பள்ளியில் சேர்ந்த முதல் நாளே தலை நசுங்கி உயிரிழந்த 4 வயது சிறுவன்..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கிராமத்தில் முதல் நாளில் நான்கு வகை வயது சிறுவன் வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகவேந்திரா தனியார் பள்ளியில் சிறுவன் எல்கேஜி சேர்க்கப்பட்டுள்ளார்.
பள்ளி முடிந்து மீண்டும் பள்ளிவாகனத்தில் வந்து கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர். முதல்நாள் என்பதால் வரும் நேரம் குறித்து தாயாருக்கு தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. சிறுவன் இறங்கிய பின் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஓட்டுநர் வலது பக்கம் திருப்பிக் கொண்டு பின் பக்கம் சென்றுள்ளார்.
அப்பொழுது சிறுவன் பின்னால் இருந்ததை கவனிக்காமல் ஏறியதால் பின்பக்க சக்கரம் ஏறி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுனரை கைது செய்தனர். உதவியாளர் இல்லாமல் பேருந்தை பள்ளி நிர்வாகம் இயக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





