கை விலங்குடன் தப்பிச்சென்ற கைதி..!
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தஞ்சாவூர் அருகே கை விலங்குடன் தப்பிய நிலையில் கிராம மக்கள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை நாகை காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தார்.
கோபிசெட்டிபாளையத்தில் இருந்து நாகை காவல்துறையினர் வாகனத்தில் அழைத்து வந்தனர். இயற்கை உபாதை காரணமாக தஞ்சாவூர் பரமக்குடி அருகே காவல் துறையினர் வாகனத்தை நிறுத்திய போது கைதி தனசேகரன் கை விலங்குடன் தப்பி ஓடினார்.
இதனையடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு கிராம மக்கள் உதவியோடு கைதியை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





