திருப்பதிக்கு வரும் பக்தர்களிடமிருந்து 1100 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1100 மதுபாட்டில்கள் அடித்து உடைத்து அளிக்கப்பட்டன. திருப்பதியில் மது, மாமிசம், புகையிலை, சிகரெட் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சோதனைச்சாவடியில் தணிக்கை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் திருப்பதிக்கு வந்த பக்தர்களிடம் இருந்து கடந்த 4 மாதங்களில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு 1100 மதுபாட்டில்கள் கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் அடித்து உடைக்கப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




