இரண்டாவது நாளாக வெற்றிப் பேரணி நடத்திய பிரதமர் மோடி..!
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது நாளாக வெற்றி பேரணியை நடத்தினார். காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள தேகம் நகரிலிருந்து லாபர் கிராமத்தில் உள்ள ராஷ்ட்ரிய லக்ஷா பல்கலைக்கழகம் வரை இந்த வெற்றிப் பேரணி நடைபெற்றது.
ராஜ்பவனில் இருந்து தேகம் வரை கார் மூலம் சென்றடைந்த மோடி அங்கிருந்து திறந்த ஜீப்புக்கு மாறினார். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு அவருக்கு மக்கள் பலர் தூவி மரியாதை அளித்தனர்.
முன்னதாக பிரதமர் மோடிவெள்ளிக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து காந்திநகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் வரை வெற்றி பேரணி நடத்தினார். பிரதமரின் இந்த வெற்றிப் பேரணியில் டிசம்பரில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்கான ஒரு தொடக்கமாக பார்க்கப்படுகிறது.






