ஆசிரியர் திட்டியதால் கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை..!
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கல்லூரி ஆசிரியர் திட்டியதாக கூறப்படும் நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
முதலாமாண்டு படித்து வந்த மாணவி இந்து பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






