வரும் 14 முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கம்..!
புதுச்சேரியில் வரும் 14ஆம் தேதி முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள எல்கேஜி யூகேஜி வகுப்புகள் வருகிற 14-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






