தமிழகத்தில் 92 சதவீதம் மகளிரிடம் வங்கிக் கணக்கு..!
வங்கிக் கணக்கு வைத்துள்ள மகளிரின் எண்ணிக்கையில் 92 சதவீதத்துடன் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது. நாடு முழுவதும் 15 முதல் 45 வயதுக்குட்பட்ட வங்கி கணக்கு வைத்துள்ள மகளிர் குறித்த அறிக்கையை தேசிய குடும்ப நல ஆய்வு தெரிவித்துள்ளது.
அதன்படி புதுச்சேரியில் உள்ள பெண்களில் 93 சதவீதம் பேர் வங்கி கணக்குகளை வைத்திருப்பது தெரியவந்தது. புதுச்சேரி தவிர பெரிய மாநிலங்களில் தமிழகம் 92 சதவீதத்துடன் முதலிடம் வகிக்கிறது. அடுத்த இடத்தை 89 சதவீதத்துடன் கர்நாடகா பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




