--- --:--:-- --

பாட்டியின் தகாத உறவால் பலியான பச்சிளம் குழந்தை..!

8

கேரள விடுதியில் நீரில் மூழ்கி அடித்து ஒன்றரை வயது பெண் குழந்தையை கொலை செய்து நாடகமாடிய பாட்டியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் அவரது குழந்தைகள் இருவரும் தனது தாயாரிடம் கொடுத்து பராமரித்து வந்தார்.

 

அவரின் தாயாருக்கும், ஜான் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்தது. இதனிடையே தனது மகனின் குழந்தையை தனது குழந்தை என்றும் அந்த குழந்தைக்கு ஜான் தான் காரணம் என்று கூறி அவரை மிரட்டி வந்துள்ளார். அதேவேளையில் தனது இரு குழந்தைகளுடன் கொச்சியில் உள்ள ஒரு விடுதியில் ஜான் உடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.

 

அப்போது பாட்டி வெளியே சென்றதால் ஜான் அங்கிருந்த தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் கொலை செய்தது ஜான் என்பது தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon