--- --:--:-- --

நூதன முறையில் பணம் பறித்த முகநூல் நண்பர்..!

7

சேலத்தைச் சேர்ந்தவரிடம் நூதன முறையில் பணம் பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சுரேஷ் விளம்பரத்தை பார்த்து குறிப்பிடப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

 

எதிர் தரப்பில் பேசிய ஒருவர் மருந்து வியாபாரத்தில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனிடையே விமான நிலையத்தில் இருப்பதாகவும் சுங்க வரியாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும் தான் வெளியில் வந்ததும் அந்த பணத்தை தருவதாகவும் அந்த நபர் சுரேஷிடம் கூறியுள்ளார்.

 

சுரேஷும் அதனை நம்பி அந்த நபர் கூறியதுபோல பணம் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அந்த நபர் சுரேஷின் தொடர்பை துண்டித்துள்ளார். எனவே, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon