மணிப்பூரில் மீண்டும் பாஜக ஆட்சி
மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் இருக்கும் 60 தொகுதிகளில் பாரதிய ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்று உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்று உள்ளது. தேசிய மக்கள் கட்சி 7 இடங்களையும் கைப்பற்றியது. ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களிலும், சுயச்சை இரண்டு இடங்களிலும் வென்றுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





