மனைவியை கேலி செய்தவர்களை தட்டிக் கேட்ட கணவன் மீது தாக்குதல்..!
சென்னையில் மது போதையில் மனைவியை கேலி செய்த நபரை தட்டிக்கேட்ட கணவரையும் அவரது குடும்பத்தாரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கீழ்பாக்கம் தோட்ட சாலையில் சுஜித் ஷர்மா என்பவர் ஐஸ்க்ரீம் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு ஐஸ்க்ரீம் கடைக்கு மதுபோதையில் வந்த இரண்டு நபர்கள் அவரை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
அவரை அழைத்துச் செல்வதற்காக அந்த சமயம் கடைக்கு வந்த அவரது கணவர், தனது மனைவியை கேலி செய்தது குறித்து ஆத்திரமடைந்து தட்டி கேட்டார். மதுபோதையில் இருந்த நபர் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





