--- --:--:-- --

மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பெண்..!

4

உக்ரைனில் இருந்து மீட்டதற்காக பாகிஸ்தான் மாணவி ஒருவர் இந்திய தூதரகத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் இந்தியா மீட்டு வருகிறது.

 

இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இந்த திட்டத்தில் மீட்கப்பட்டு தாய்நாடு அழைத்து வரப்பட்டனர். இந்தநிலையில் மருத்துவம் பயின்று வந்த பாகிஸ்தானை சேர்ந்த மாணவி அங்கிருந்து வெளியேற மேற்கு உக்ரைனை நோக்கி சென்றார்.

 

ஆனால் அந்த பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களைக் இடையே மோதல் வலுத்து வருவதால் இந்திய தூதரக அதிகாரிகள் அந்த பெண்ணை மீட்டு மேற்கு உக்ரைனுக்கு அழைத்து சென்றனர்.

 

பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அவர் விமானத்தில் வந்ததாக வெளியிட்ட வீடியோ பதிவில் நான் பாகிஸ்தானுக்கு பத்திரமாக வந்து இருக்கிறேன் என்றால் அதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் தான் காரணம். இதற்காக அவர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon