25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் மாற்றம்..!
25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பேராசிரியர்கள், தொழில்நுட்ப பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.
தேசிய கணிதம் மற்றும் மகளிர் தினத்தை ஒட்டி லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பாடத் திட்டத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
தேசிய கல்வி கொள்கைக்கு பதில் மாநில கல்வி கொள்கை உருவாக்கவும் புதிய குழு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.






