பாகனை காலால் மிதித்த யானை..!
கேரளாவில் யானை ஒன்று காலால் உதைத்து மிதித்ததில் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் கோவில் திருவிழாவிற்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்ட நிலையில் அதற்கு துணையாக இரண்டு பாகன் வந்து இருந்தனர்.
அப்போது பாகன் மேல் இருந்து கீழே விழுந்த பையை எடுக்க இறங்கிய நிலையில் யானை முன்பிருந்த மற்றொரு பாகன் யானையின் முன்னங்காலில் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யானை கீழே இறங்கிய பாகனை காலால் உதைத்து தள்ளி தும்பிக்கையால் தாக்கியது.
இதைக்கண்டு அதிர்ந்த மற்றொரு பாகன் யானையின் காலைப் பிடித்து இழுத்ததால் மீண்டும் கோபமடைந்த யானை காலால் உதைத்தது. இதில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






