--- --:--:-- --

மணிப்பூரில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு ..!

1

ணிப்பூர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கியது. மணிப்பூர் சட்டப்பேரவையில் 60 தொகுதிகள் உள்ளன. அதில் கடந்த இருபத்தி எட்டாம் தேதி முப்பத்தி எட்டு தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

16 மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதற்காக 1247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 பெண்கள் உட்பட 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Right Menu Icon