செல்போனை அடமானம் வைத்த தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செல்போனை அடமானம் வைத்த தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்த வழக்கில் தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் ராஜமாணிக்கம் என்பவரின் செல்போனை வாங்கி பாரதிமோகன் என்பவருக்கு 700 ரூபாய்க்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற பாரதிமோகன் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், அவரது தம்பி பாலமுருகன், தாய் ரேணுகா தேவி ஆகியோர் பாரதிமோகன் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின்பேரில் தாய் மகனை கைது செய்து போலீசார் ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.






