காவல் உதவி ஆய்வாளர் என ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது..!
காவல் உதவி ஆய்வாளர் என ஏமாற்றி வியாபாரி உள்பட 3 பேரிடம் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நான் சென்னையில் உதவியாளராக பணியாற்றி வருவதாகவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் வேலூரில் தங்கியிருப்பதாகவும் தினேஷ் குமார் என்ற வியாபாரியை நம்ப செய்துள்ளார்.
சீருடையில் இருப்பது போன்ற புகைப்படம், போலி அடையாள அட்டையும் காண்பித்துள்ளார். காவல்துறையால் பரிந்துரை செய்யப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
இதை நம்பி இரண்டு கார்களுக்கான தொகையாக 14 லட்ச ரூபாயை ரோகிணியின் வங்கி கணக்கிலும் அவரது கணவரின் வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளனர். பின்னர் ஏமாந்தது புரிந்ததால் புகார் அளித்துள்ளனர்.






