--- --:--:-- --

இன்று கூடுகிறது ஐ.நா பொதுச்சபை..!

1

க்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடர்பாக விவாதிக்க ஐநா பொதுச் சபையின் அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தங்கள் நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அரசு நிராகரித்துள்ளது.

 

அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்சபையை கூட்டுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வழக்கம்போல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

 

ஐநா பொது சபை கூடுவது தனக்கு எதிரானது என்பதால் தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யா வாக்களித்தது. மொத்தமுள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் ஐநா பொதுச் சபையின் அவசர கூட்டத்தை இன்று கூட்டுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

உக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐநா பொதுச் சபையின் அவசரக்கூட்டம் 10 முறை மட்டுமே நடந்துள்ளது.

 

Right Menu Icon