உத்தரபிரதேசத்தில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு..!
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்திர பிரதேசத்திலுள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
9 மாவட்டங்களைச் சேர்ந்த 59 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன மொத்தமாக 124 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.







