--- --:--:-- --

மாஸ்க் கட்டாயம் என உத்தரவு போட்டுவிட்டு மாஸ்க் இல்லாமல் ஆட்டம் போட்ட மேயர்..!

9

மெரிக்காவின் நியூ ஆர்லென்ஸ் மாகாணத்தின் மேயராக செயல்பட்டு வருவபர் லடொயா கெண்ட்ரில் (49 வயது). நியூ ஆர்லென்ஸ் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடந்த 11-ம் தேதி முதல் உள் அரங்குகளில் இருக்கும்போதும் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மாஸ்க் கட்டாயம் என்ற உத்தரவை மேயர் லடோயா கெண்ட்ரில் பிறப்பித்தார்.

 

இந்நிலையில், மாஸ்க் கட்டாயம் என தான் பிறப்பித்த உத்தரவை 7 நாட்களில் அவரே மீறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேயர் கெண்டிரில் கடந்த 18-ம் தேதி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

 

அந்த நிகழ்ச்சியில் மேயர் கெண்டிரில் மாஸ்க் இல்லாமல் நடனமாடுவதும், பாட்டுப்பாடுவதுமென உற்சாகமாக இருந்தார். மேலும், அந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாஸ்க் அணியவில்லை. இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

உள் அரங்குகளில் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துவிட்டு அந்த உத்தரவை தானே மீறிய மேயர் கெண்டிரிலுக்கு சமூகவலைதளத்தில் கண்டனம் எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon