--- --:--:-- --

ரிலாக்ஸ் என்ற வார்த்தை வடிவில் வானில் பறந்த விமானி..!

6

உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் உலக நாடுகள் அமைதி அடைய வேண்டி நூதன முறையில் மால்டோவா நாட்டு விமானி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனி விமானம் மூலம் வானில் வட்டமடித்த விமானி ரிலாக்ஸ் என்ற வார்த்தை வடிவில் ஆகாயத்தில் பயணித்துள்ளார்.

 

போர் பதற்றத்திலிருந்து மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விடுதலை பெற்று நிம்மதி அடைய கோரிக்கை வைத்துள்ளார். வானில் ரிலாக்ஸ் என்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவப் பாதையில் விமானம் சென்ற வீடியோ ரேடார் கண்காணிப்பு இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon