--- --:--:-- --

கிணற்றிற்குள் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழப்பு..!

7

த்திரபிரதேசத்தில் கிணற்றில் இரும்புவலை உடைந்ததில் அதன் மீது நின்று கொண்டிருந்த 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குஷிநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது இரும்பு வலையின் மீது நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

 

அப்பொழுது கிணற்றில் இரும்பு வளையம் உடைந்து அதன் மீது நின்று கொண்டிருந்த 13 பேர் கிணற்றுக்குள் விழுந்து மூழ்கினர். இந்த விபத்தில் 13 பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாவட்ட ஆட்சியர் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon