பேஸ்புக் போல் வாட்ஸ் அப்பில் புதிய வசதி..!
வாட்ஸ் அப் செயலியில் பேஸ்புக் பக்கத்தை போல கவர் போட்டோ வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. உலகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலியில் பேஸ்புக் பக்கத்தை போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை அறிய உதவும் இணைய தளத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வசதி வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகமாகி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





