--- --:--:-- --

விண்வெளியில் ஏலியன்கள் குறித்து ஆய்வு..!

1

விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் மதகுருமார்கள் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளியில் ஏலியன்கள் குறித்து ஆய்வு செய்து வருவதற்கு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

 

விண் வெளியில் அறியப்படாத இடத்திலிருந்து மின்காந்த அலைகளாக சமீங்கை வரும்போதெல்லாம் ஏலியன்கள் அதாவது வேற்றுக்கிரகவாசிகள் குறித்து பேச்சு அடிபடும். இதுகுறித்து நெடுங்காலமாக அறிவியல் ரீதியில் நாசா ஆய்வு செய்து வருகிறது.

 

அதே சமயம் ஏலியன்கள் குறித்து ஒவ்வொரு மதத்திலும் ஒரு நம்பிக்கை ரீதியிலான கதையும் உண்டு. அதை வெறும் கட்டுக்கதையாக அல்லாமல் தங்களது ஆய்வுக்கு எந்த வகையிலாவது உதவுமா என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதன் முடிவாக உலகம் முழுவதிலுமிருந்து வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இறை நம்பிக்கையாளர்களை பணியமர்த்த நாசா திட்டமிட்டுள்ளது. அவர்கள் வேற்றுகிரக வாசிகளிடம் எந்தவகையில் தொடர்பு கொள்கின்றனர் என்பதை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

 

Right Menu Icon