--- --:--:-- --

ஹிஜாப்பை எடுத்துவிட்டு பள்ளிக்கு வரும்படி கூறிய ஆசிரியர்..!

2

ர்நாடகத்தின் மாண்டியாவில் ஒரு பள்ளியில் ஹிஜாபுடன் வந்து சிறுமியை உள்ளே அனுமதிக்கும் படி பெற்றோரும் ஹிஜாபை எடுத்து விட்டு வரும்படி ஆசிரியரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கர்நாடகத்தில் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் மாண்டியாவில் உள்ள ஒரு பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து சிறுமியை பெற்றோர் அழைத்து வந்தனர். வாயிலில் நின்று ஆசிரியர் ஹிஜாபை அகற்றி விட்டு உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார்.

 

அதை ஏற்றுக்கொள்ள மறுத்த பெற்றோர் முதலில் உள்ளே அனுமதியுங்கள் பின்னர் வகுப்புக்கு சென்ற பின் ஹிஜாபை கழற்றி கொள்ளலாம் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon