--- --:--:-- --

10, +2 திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தன..!

2

10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வைரல் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

திங்களன்று பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு பன்னிரண்டாம் வகுப்பு கணிதத் தேர்வு நடைபெற இருந்தது. திருவண்ணாமலையில் இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் கசிந்தது.

 

இது தொடர்பாக செய்யாறு காவல் நிலையத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டபோது தனியார் பள்ளிகளை சேர்ந்த சிலர் வெளியிட்டு இருப்பதாகவும் இனி இதுபோன்று நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார் .

 

இதனிடையே வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சட்ட ரீதியான விசாரணைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon