குடிபோதையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்.!
பெரம்பலூர் அருகே குடிபோதையில் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நபர் அதே பள்ளியில் பயிலும் நான்கு பேரை சீருடையை மாற்றிவிட்டு வண்ண உடையில் வகுப்பறையில் நடனமாடுமாறு அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில் சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர் வந்து பார்த்தபோது செல்லதுரை குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.






