உ.பி. 2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது..!
உத்திர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று நிறைவடைகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளொன்றுக்கு மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டத்தில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் சுமார் 60% வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்தனர். இரண்டாம் கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் களத்தில் 584 வேட்பாளர்கள் உள்ளனர்.
இதற்காக கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைகிறது. வாக்குப்பதிவு அமைதியாக நடப்பதை உறுதிப்படுத்த மாநில காவல் துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளை மறுநாள் கோவாவிலும் நாளை ஒருநாள் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பரப்புரையும் இன்று மாலையுடன் முடிவடைகிறது.







