காதலர் தினத்தன்று திருமணம் செய்யப்போகும் திருநர், திருநங்கையர்..!
கேரளாவில் சேர்ந்த எல் ஜி பி டி பி சமூகத்தை சேர்ந்த சியாமா, மனு ஆகிய இருவரும் காதலர் தினத்தன்று திருநங்கை அடையாளங்களுடன் தங்களது திருமணத்தை பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இருவரும் திருநர், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை பதிவு செய்ய மாநில உயர்நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளனர்.
பிப்ரவரி 14ஆம் தேதி அன்று காலை 9.30 மணி அளவில் இருவரது திருமணமும் நடைபெற உள்ளதாகவும், திருமணத்திற்கு குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அவர்கள் சமூகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருநங்கை அடையாளத்தின் கீழ் திருமணம் செய்ய உள்ள அவர்களின் முடிவுக்கு கேரளாவில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.






