--- --:--:-- --

புத்தகப் பைகள் இல்லா தினம் திடீர் ரத்து..!

6

புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகப்பையில் ஆனால் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

மாணவர்களிடையே மன அழுத்தத்தை போக்கும் வாழ்வியலை மேம்படுத்தும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த புதிய திட்டம் இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒரு கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 

இந்த நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டி இருப்பதால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீண்டும் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

 

Right Menu Icon