மலை இடுக்கில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் இன்று டிஸ்சார்ஜ்..!
கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞரின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பாபு என்ற இளைஞர் மலையேற்றத்தின் தவறி விழுந்த நிலையில் இடுக்கில் சிக்கிக் கொண்டவருக்கு பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுமார் 42 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்திய ராணுவத்தின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய முடிவெடுத்த நிலையில் மாநில வனத் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அது கைவிடப்பட்டது.






