வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி..!
உத்திரபிரதேச மாநில தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மாநிலத்தில் நிலவும் வேலை வாய்ப்புபிரச்சினைகள் குறித்து மக்களிடம் கூறினார்.
தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் கடைக்காரரிடம் உரையாடிய அவர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.






