--- --:--:-- --

சேவலுக்கு பயணச்சீட்டு வழங்கிய அரசுப் பேருந்து நடத்துநர்..!

9

தெலுங்கானா மாநிலம் கோதாவரியில் வழங்கப்பட்ட அரசு பேருந்தில் பயணி ஒருவர் கொண்டு சென்று சேவலுக்கு நடத்துநர் பயணச்சீட்டு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோதாவரி பேருந்து நிலையத்திலிருந்து கரீம் நகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

 

இதில் சென்ற முகமது அலி என்ற நபர் சேவலை கொண்டு சென்றுள்ளார். அதை கவனித்த நடத்துனர் சேவலுக்கு தனியாக பயணச் சீட்டு பெற வேண்டும். இல்லையென்றால் பேருந்தை விட்டு கீழே இறங்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பயணச்சீட்டு பெற்று தொடர்ந்து அவர் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார். இதுகுறித்து நடத்துனரிடம் கேட்டதற்கு பயணியுடன் கொண்டுவரப்படும் செல்லப் பிராணிகளுக்கும் பயணச் சீட்டு பெற வேண்டும் என குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon