--- --:--:-- --

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த சாமியார்..!

3

பாகிஸ்தானில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என பெண்ணின் தலையில் சாமியார் ஒருவர் ஆணி அடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

அந்த பெண் தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை செய்யுமாறு சாமியார் ஒருவர் கூறியுள்ளார். அந்த வகையில் ஆணியை தலையில் அடித்துள்ளார்.

 

கர்ப்பிணி பெண் தலையில் ஆணி எடுத்த புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது. இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆணி அகற்றப்பட்டு மருத்துவம் அளித்து வருகின்றனர்.

 

இது தொடர்பாக பேசிய மருத்துவர்கள் பெண்ணின் தலையில் 2 இன்ச் அதிகமாக இறங்கி இருந்தது எனவும், ஆணி மூளையில் பட்டிருந்தால் பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

 

Right Menu Icon