--- --:--:-- --

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?

6

டம்பூர் முதல்நிலை பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கான தேர்தலை ரத்து செய்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலைத் தேர்வில் ஆட்சியர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் அலுவலர் மற்றும் உதவி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

Right Menu Icon