--- --:--:-- --

தடுப்பூசி பதிவுக்கு ஆதார் கட்டாயமா..?

5

கோவின் இணையதளத்தில் கொரொனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

 

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் இணையதளத்தில் தடுப்பூசி பதிவிற்கு ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என்றும் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஒன்பது அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.

 

Right Menu Icon