Sorry சொன்ன கேஎஃப்சி..! காரணம் என்ன..?
காஷ்மீர் பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக கேஎப்சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்தியாவில் கேஎஃப்சி நிறுவனம் 450 மையங்களுடன் இயங்கி வருகிறது.
அந்த நிறுவனத்தின் சமூக ஊடக கணக்கில் காஷ்மீருக்கு சொந்தம் என்று சர்ச்சைக்குரிய வகையிலான பதிவு வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கேஎஃப்சி இந்தியாவிற்கு வேலியாகச் ஏற்படக்கூடிய சில கேஎஃப்சி சமூக ஊடகங்களில் வெளியான செய்திக்காக மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளது.
இந்தியாவுக்கு கௌரவம் சேர்ப்பதுடன் இந்தியாவை தாங்கள் மதிப்பதாக தெரிவித்துள்ளது. அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையுடன் சேவை செய்வதற்காக தங்களுடைய உழைப்பில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.







