மனைவி செய்த காரியாத்தால் 7 வருடம் தூங்கிய கணவன்..!
கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் சதீஷ், ஆஷா தம்பதியினர். கடந்த ஏழு வருடங்களாக சதீஷ்க்கு வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூக்கம் வந்துவிடும். மறுநாள் உடலும் சோர்வாக இருந்துள்ளது.
தனக்கு ஏன் இவ்வாறு இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூக்கம் வந்து பாடாய் படுத்துகிறது என்று கவலையிலேயே வாழ்ந்துள்ளார். வேலை காரணமாக ஹோட்டலில் சாப்பிடும் பொழுது அது போல் தூக்கம் வரவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதனால் வீட்டு சமையல் அறையில் ரகசிய கேமராவை வைத்து பார்த்துள்ளார். அதில் அவரது மனைவி சாப்பாட்டில் மனநல பாதிப்பிற்கு கொடுக்கப்படும் தூக்க மருந்தை கண்டுபிடித்தார்.
இதுபோல் தூக்க மருந்து கலந்து கொடுத்தால் கணவர் தனது சொல்பேச்சு கேட்பார் என்று அவரது மனைவி இவ்வாறு செய்ததாக தெரிகிறது. தற்பொழுது சதீஷின் மனைவி ஆஷா போலீசில் கைது செய்யப்பட்டுள்ளார்.






