ரயில்வே மேம்பாலத்தில் இருந்து நிலைதடுமாறி கவிழ்ந்த கார்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கற்களை இடித்து விட்டு தறிகெட்டு ஓடியது. தண்டவாளத்தின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காரில் பயணித்த 6 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ரமேஷ்குமார் தனது சக ஊழியர்களுடன் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
நேற்று இரவு 11 மணி அளவில் ரயில்வே மேம்பாலத்தில் அதிவேகமாக அவர்கள் சென்று கொண்டிருந்த பொழுது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் காருக்குள் இருந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் காரை தண்டவாளத்தில் இருந்து அகற்றினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






