நீட் மசோதா தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இன்று சட்டமன்ற கட்சி தலைவர் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு விலக்கு கோரும் சட்டம் , படிவம் சட்ட மன்றத்தில் நடைபெறும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த மசோதா மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தியுள்ளார். ஆனால் இது தொடர்பாக ஆளுநர் ரவி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிஎம்பிக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஆளுநரை திரும்பப் பெறக்கோரி வெளிநடப்பு செய்தனர். இந்தநிலையில் நீட்தேர்வு மசோதாவை ஆளுநர் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார்.
இது தொடர்பாக ஆலோசிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது.






