--- --:--:-- --

சாலையில் Help Me CM பதாகையுடன் நின்ற மாணவனிடம் பேசிய முதல்வர்..!

9

சாலையில் ஹெல்ப் மீ சி‌எம் என்ற பதாகையுடன் நின்றிருந்த ஆந்திர மாணவனை அழைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது ஹெல்ப் மி சி‌எம் என்ற பதாகையுடன் ஆந்திர மாநில மாணவர் ஒருவர் சாலையோரத்தில் நின்று இருந்தார். அதை கவனித்த முதலமைச்சர் உடனடியாக காரை நிறுத்தி மாணவனை அழைத்து குறைகளை கேட்டறிந்தார்.

 

மாணவர் தான் அடைந்த மன உளைச்சல் மற்றும் பாதிப்பை எடுத்துக்கூற நீட் தேர்வை தடை செய்வது குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் தெரிவித்தார்.

 

Right Menu Icon