--- --:--:-- --

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறார் துரைமுருகன்..!

7

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இன்று சந்தித்து பேசுகிறார்.

 

முல்லைப் பெரியாறு அணையில் உறுதி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தேசிய நதிநீர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்ததற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அணையின் பாதுகாப்பை தற்பொழுது மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழகத்தின் உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை துரைமுருகன் சந்தித்து பேச உள்ளார். இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக துரைமுருகன் கலந்தாலோசிப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon